Ads Area

மஜீட்புர மண்ணில் வரலாற்றுச் சாதனை: உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் 7-ம் இடம் பெற்று சட்டபீடத்திற்கு தெரிவு.

சம்மாந்துறை அன்சார்.


தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, சம்மாந்துறை மஜீட்புர கிராமத்தைச் சேர்ந்த மாணவன் புஹாரி முஹம்மட் சிஹாப் கலைத்துறையில் பாரிய சாதனை ஒன்றைப் படைத்து சட்ட பீடத்திற்கு தெரிவாகியுள்ளார். மஜீட்புர வரலாற்றில் சட்டபீடத்திற்கு தெரியான முதல் மாணவர் இம் மாணவர்தான் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.


மஜீட்புர கிராமத்தின் கல்வி வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை எழுதியுள்ள இம்மாணவர், கலைத்துறையில் பின்வரும் பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்:


பெறுபேறு: 3A (மூன்று பாடங்களிலும் சிறந்த சித்தி)


மாவட்ட தரவரிசை: 7-வது இடம்


மஜீட்புர வரலாற்றில் கலைத்துறையில் இத்தகையதொரு உயர் மட்டத்திலான இடத்தையும், மூன்று 'A' சித்திகளையும் ஒரே நேரத்தில் பெற்ற முதலாவது மாணவன் என்ற வரலாற்றுப் பெருமையை சிஹாப் தன்வசப்படுத்தியுள்ளார்.


இவரது இந்த மகத்தான வெற்றியானது அவர் கல்வி கற்ற பாடசாலைக்கும், மஜீட்புர கிராமத்திற்கும் பெரும் புகழையும் கௌரவத்தையும் தேடித்தந்துள்ளதாக கிராம மக்கள் மற்றும் கல்விச் சமூகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


"விடாமுயற்சியும் முறையான திட்டமிடலுமே இந்த வரலாற்றுச் சாதனைக்கு அடிப்படை. மஜீட்புர மண்ணிலிருந்து இன்னும் பல சாதனையாளர்கள் உருவாக இவரின் வெற்றி ஒரு உந்துசக்தியாக அமையும்."


தற்போது சமூக வலைத்தளங்களிலும், நேரிடையாகவும் மாணவன் சிஹாபிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதே போன்று அவரது  பகுதி நேர கற்பித்தல் நடவடிக்கைகளக்கு உறுதுனையாக இருந்த ஆசிரியர் அஸ்மி மொஹமத் தம்பி அவர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன.


எதிர்காலத்தில் சிறந்ததொரு கல்விமானாகத் திகழ நாமும் எமது சம்மாந்துறை24 இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe