Ads Area

இவைகள் தண்டனைக்குரிய குற்றச் செயல்கள்; விவசாய உரம் வியாபார நிறுவனங்களின் உரிமையார்களுடன் விசேட கலந்துரையாடல்.!

விவசாய உரம் வியாபார நிறுவனங்களின் உரிமையார்களுடனான விசேட கலந்துரையாடல் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சின் விவசாய பிரிவின் தேசிய உரச் செயலகத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலாளார் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் நேற்று(04) சம்மாந்துறை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

 

இதில் அம்பாறை மாவட்ட செயலக தேசிய உரச் செயலகத்தின் பிரிதிப் பணிப்பாளார் கே.எல்.எம் சர்ஜூன், அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலானாய்வு உத்தியோகத்தரகளான இஷட்.எம் ஸாஜீத், எம்.எச்.எம் றிபாஜ், எ.பீ.எம் றிப்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர். 


இதன்போது தற்போது உலக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உரம் வியாபார நடவடிக்கைகளில் மேற்கொள்ளும் வியாபாரிகள், விவசாயிகள் உரம் கொள்வனவு செய்யும்போது கட்டாயம் பற்றுச்சீட்டு வழங்க வேண்டும் எனவும் பொறிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல், அனுமதியின்றி களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்ய மறுத்தல், கலப்படம் செய்தல், அரச மானிய மற்றும் நிர்ணய விலையில் மாற்றம் செய்தல் ஆகியன நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும வியாபாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. 


இதில் கல்முனை, சம்மாந்துறை நிந்தவூர் ஆள்புல எல்லைக்குற்பட்ட உரம் வியாபார நடவடிக்கை மேற் கொள்ளும் வியாபார நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe