Ads Area

நாளை சம்மாந்துறை வீரமுனைக் கிராம சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்: நேற்றும் இன்றும் எண்ணெய்க் காப்பு ஆரம்பம்!

(வி.ரி. சகாதேவராஜா)


அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில்  புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா நாளை   12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  சிறப்பாக நடைபெற உள்ளது.


இதனையொட்டி கடந்த  09.04.2026 ஆம் தேதி வியாழக்கிழமை  கணபதி ஹோமம் மற்றும் கர்மாரம்பம் நடைபெற்றது.


அதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை 10.04.2026 மற்றும் இன்று 11.04.2026 சனிக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.00 மணி முதல் மாலை 3 மணி வரை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. பெரும்பாலான பக்தர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர்.


அனைவரையும் ஆலய தலைவர் பொன். ரமேஷ்,  செயலாளர் குமரேசன் , பொருளாளர் யோகேந்திரன் ஆகியோர் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.


மகா கும்பாபிஷேக நிகழ்வு 12.04.2026 நாளை  ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe