Ads Area

உங்களது இகாமா Expire ஆகாமல் Sponsor (Employer) யின் அனுமதியின்றி Final Exit விசாவை கென்சல் பண்ண முடியுமா..??

சம்மாந்துறை அன்சார்.


சவுதிய அரேபியாவில் வசிக்கும் ஒருவர் என்னிடம் கேட்ட ஒரு கேள்வி என்னவென்றால், “எனது இகாமா Expire ஆகாமல் Sponsor (Employer) யின் அனுமதியின்றி Final Exit விசாவை கென்சல் பண்ண முடியுமா..??“ எனக் கேட்டிருந்தார் அவரது கேள்விக்கான தெளிவான விளக்கம் இதோ.


சவூதி அரேபிய சட்டப்படி, உங்களின் Sponsor (Employer) இல்லாமல் நீங்களாகவே Final Exit விசாவை ரத்து செய்ய முடியாது. இது குறித்த தெளிவான விபரங்கள் கீழே:


Final Exit விசாவை வழங்குவதும் அதை ரத்து செய்வதும் ஸ்பான்சரின் முழு அதிகாரத்திற்கு உட்பட்டது. அவர்கள் தங்களின் Absher Business அல்லது Muqeem  மூலமாக மட்டுமே இந்த ரத்து நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.


விசாவை ரத்து செய்வதற்கு Iqama செல்லுபடியாக (Valid) இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான நிபந்தனை. ஒருவேளை இகாமா காலாவதி ஆகியிருந்தால், முதலில் அபராதத்தைச் செலுத்தி இகாமாவைப் புதுப்பித்த பிறகே விசா ரத்து நடவடிக்கையை எடுக்க முடியும். இதற்கும் உங்கள் ஸ்பான்சரின் ஒத்துழைப்பு அவசியம்.


Final Exit விசாவை ரத்துச் செய்வதாக இருந்தாலும் உங்களுக்கு விசா வழங்கப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் ரத்து செய்யப்பட வேண்டும். 60 நாட்களுக்குப் பிறகு ரத்து செய்தால், 1,000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.


இதில் நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய இன்னுமொரு விசயம் அதாவது உங்கள் முதலாளி அல்லது நிறுவனத்திடம் நீங்கள் உங்களது Final Exit விசாவினை ரத்துச் செய்யக் கோரியும் அவர்கள் அதனை ரத்துச் செய்ய மறுத்தால்,  Labor Court (தொழிலாளர் நீதிமன்றம்) மூலம் நீங்கள் கம்ப்ளைன் பண்ணலாம் அல்லது  `Qiwa` தளம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நீங்கள் முறைப்பாடு  அளிக்கலாம்.


விதிவிலக்கான சூழ்நிலைகளில் அதாவது உங்களது  நிறுவனம் "Red" பிரிவில் இருந்தாலோ அல்லது மூடப்பட்டிருந்தாலோ, ஜவாசாத் அலுவலகத்தை அணுகி உரிய காரணங்களை விளக்கியும் உதவி கோரலாம்.


சட்டப்பூர்வமாக நீங்களாகவே ஒன்லைனில் Final Exit விசாவை ரத்து செய்ய முடியாது. ஸ்பான்சர் மூலமாக மட்டுமே இதைச் செய்ய முடியும். ஒருவேளை நீங்கள் வேறு நிறுவனத்திற்கு மாற (Transfer) விரும்பினால், அதற்கு முன்னதாகவே இந்த Final Exit ரத்து செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe