சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறை மல்வத்தைப் பகுதியில் கடந்த வாரம் நாய் கடித்த சம்பவம் ஒன்றைத் தொடர்ந்து, அப்பகுதியில் வெறிநாய்க்கடி நோய் (Rabies) பரவுவதைத் தடுப்பதற்கான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த நாய் கடித்த சில நாட்களில் உயிரிழந்ததை அடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களுக்குத் தடுப்பூசி ஏற்றும் விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சட்ட விதிகளின்படி நாய்களைக் கொல்ல முடியாது என்பதால், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவதே சிறந்த தீர்வாகக் காணப்படுகிறது. இந்த விசேட திட்டத்தின் கீழ், இன்றைய தினம் மட்டும் சுமார் 26 தெரு நாய்களுக்கு வெற்றிகரமாக வெறிநாய்க்கடி தடுப்பூசிகள் (Anti-Rabies Vaccination) ஏற்றப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இப்பணிகளுக்குப் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும், வீதிகளில் நடமாடும் போது அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் - MOH Sammanthurai.

