சம்மாந்துறை உடங்கா 2 பகுதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் நிலவிய கடும் சுகாதாரச் சீர்கேடுகள் காரணமாக, நீதிமன்ற உத்தரவிற்கமைய அண்மையில் (மே 9) குறித்த உணவகம் தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டது.
மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மலையடிப் பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் (PHI) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, குறித்த உணவகத்தில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற சூழலும், பல குறைபாடுகளும் கண்டறியப்பட்டன. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, உணவகத்தை உடனடியாக மூடுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டது.
நீதிமன்றக் கட்டளையின் பிரகாரம், மலையடிப் பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (Nazar PHI) முன்னிலையில் இந்த மூடல் நடவடிக்கை நேற்று அமுல்படுத்தப்பட்டது.
குறித்த உணவகம் மீண்டும் திறக்கப்படுவதற்கு பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன:
01. உணவகத்தில் காணப்பட்ட அனைத்து சுகாதாரக் குறைபாடுகளும் முழுமையாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
02. சுகாதாரப் பரிசோதகர்களின் முறையான மீளாய்வு (Inspection) மேற்கொள்ளப்பட வேண்டும்.
03. உரிய சட்ட ரீதியான ஆவணப்படுத்தல்களின் பின்னரே வியாபார நடவடிக்கைகளைத் தொடர அனுமதி வழங்கப்படும்.
பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவை உறுதிப்படுத்துவது எமது முதன்மைக் கடமையாகும். இதில் சமரசம் செய்துகொள்ளும் உணவகங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும்." என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தகவல் - MOH Sammanthurai
செய்தி வடிவம் - சம்மாந்துறை அன்சார்.

