Ads Area

சம்மாந்துறை நியூஸ்ப்ளஸ் ஊடகத்தின் இன்னுமொரு அங்கமான 'வணிக வளம்' சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு

நியூஸ்ப்ளஸ் ஊடகத்தின் இன்னுமொரு அங்கமான 'வணிக வளம்' சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு நியூஸ்ப்ளஸ் பிரதம ஆசிரியரும்,  ஊடகவியலாளருமான  கியாஸ் ஏ. புஹாரி தலைமையிலும், ஒலிபரப்பாளர் மனிதநேயன் இர்ஷாத் ஏ. காதர் முன்னிலையிலும் கடந்த வெள்ளியன்று (மே 22) கொழும்பு CIMS Campus வளாகத்தில்  இடம்பெற்றது. 


தொழில் முயற்சிகள், வழிகாட்டுதல்கள், வர்த்தக நிறுவன அறிமுகங்கள், வர்த்தகத்தில் சிகரம் தொட்ட ஆளுமைகளின் அனுபவங்கள்,சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல் என பல்வேறு வணிக வளங்கங்களை உள்ளடக்கிய இந்த சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில், 


அதிதிகளாக;


தொழிலதிபர் SMA. சாலிஹீன், Colombo Shipping நிறுவன பணிப்பாளர் MBM. றிஸ்வான், இலங்கை ரூபவாஹினி (தேசிய தொலைக்காட்சி) கூட்டுத்தாபன முன்னாள் பிரதிப் பணிப்பாளரும்  ஒலிபரப்பாளர்  ஒன்றியத்தின் தலைவருமான UL. யாக்கூப், சிரேஷ்ட ஒலிபரப்பாளர் சட்டத்தரணி ஏயெம். தாஜ், CIMS  உயர் கல்வி நிறுவன பணிப்பாளர் நாயகம் Dr. அன்வர் எம். முஸ்தபா, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்று அதிகாரி விஞ்ஞான முதுமாணி அஸ்மி யாசீன், ஹட்டன் நெஷனல் வங்கியின் முன்னாள் முகாமையாளர் ALM. நஸீர், விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியரும், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான MBM. பைரூஸ், கவிஞர் தமிழ் தென்றல் அலி அக்பர், வைத்தியர் AL அஹமட் ரிஷி விடியல் ஊடகத்தின் பிரதம ஆசிரியர் றிப்தி அலி, வர்த்தகர் சபீக் இஸ்மாயில், தினகரன் பத்திரிகையின்  சிரேஷ்ட ஊடகவியலாளர் தௌபீக் கனி, பிறை ரீ.வி. கட்டுப்பாட்டாளர் றிஸ்வான், சக்தி ரீ.வி. அறிவிப்பாளர் சௌக்கி, ஊடகவியலாளர் ரிலான் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe