( மின்மினி மின்ஹா )
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் உளநலப் பிரிவும், சம்மாந்துறை கல்வி வலய பணிமனையும் இணைந்து உளவளத் துணை ஆசிரியர்களுக்கான ஒருநாள் தொழில் வாண்மை விருத்தி கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்வு நேற்று (18) சம்மாந்துறை அல்-மர்ஜான் தேசிய பாடசாலையில் நடைபெற்றதுடன், கல்வி மற்றும் உளநலத் துறையைச் சேர்ந்த பலரும் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சம்மாந்துறை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஷஹீட், ஆசிரிய ஆலோசகர் ஏ . எச்.எம். சவாஹிர், ஜனாப் எம். அன்வர் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், சம்மாந்துறை வைத்தியசாலையின் உளநல வைத்தியர் திருமதி எம்.சி. பாத்திமா உனைஷா மற்றும் சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் ஏ. ஜே. நஜீபா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர்.
மாணவர்களின் உளநலப் பாதுகாப்பு, பாடசாலைகளில் ஆலோசனை வழங்கும் நடைமுறைகள், உளவள ஆதரவு சேவைகளை வலுப்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் தொடர்பாக கருத்துக்கள் பகிரப்பட்டன.




