7 வயதுக்குட்பட்ட ஆசிய மல்யுத்தப் சம்பியன் ஷிப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தாண்டவன் வெளி ஜோசப் வாஸ் வித்தியாலயத்தின் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி யோகேந்திர குமார் தவிசாலினி வியட்நாம் நாட்டில் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய மல்யுத்த சம்பியன் ஷிப் போட்டியில் 69 - 73 கிலோ பிரிவில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கவுள்ளார்.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
கண்டி திகனையில் நடைபெற்ற ஆசிய மட்ட மல்யுத்த சாம்பியன்ஷிப் தெரிவுப் போட்டியில் முதலிடம் பெற்று, இப் போட்டிக்கான தகைமையைப் பெற்ற,இவருடன் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மேலும் 11 வீர வீராங்கனைகள் வியட்நாம் நாட்டில் நடைபெறவுள்ள இந்த ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கை 17 வயதுக்குட்பட்ட மல்யுத்த அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக கருவப்பங்கேனி விபுலனந்தா கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் வேலு திருச்செல்வம் செயற்படுவதுடன், இப்போட்டிக்கான போட்டியாளர்களுடன் செல்லவுள்ளார். 16 வயதில் இருந்து மல்யுத்த பயிற்சிகளைப் பெற்ற மாணவி இம்மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ள மல்யுத்தப் போட்டியில் போட்டியிடவுள்ளார்.


