"யாவருக்கும் உறையுள்" எனும் மனிதாபிமான தொனிப்பொருளின் கீழ், ஓ.சி.டி (OCD) அமைப்பினால் நிர்மாணிக்கப்படவுள்ள 17 ஆவது மாதிரி வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (31) காலை 10.00 மணியளவில் சம்மாந்துறையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மலையடி வட்டார பிரதேச சபை உறுப்பினரும் ஆசிரியருமான கௌரவ அப்துல் காதர் முகம்மட் நயீம் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக OCD அமைப்பின் தலைவரும், விஞ்ஞான முதுமானியும், சமூக சேவையாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான அஸ்மின் யாசின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அடிக்கல் நாட்டி வைத்து உரையாற்றிய அமைப்பின் தலைவர் அஸ்மின் யாசின், இவ்வீடானது திட்டமிட்டபடி இன்னும் மூன்று மாத காலத்திற்குள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு, தகுதியான பயனாளியிடம் முறைப்படி கையளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இவ்விழாவில் பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் அப்னான், யூசுப் பஸீர் ஆகியோருடன், தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் ஒருங்கிணைப்பாளர்களான மௌலவி அப்துல் முனாப் (ஆசிரியர்), எம்.ரி.எம். பாயிஸ், ஏ.பி. பௌசான் மற்றும் உலமாக்கள் கலந்துகொண்டனர்.
மேலும், OCD அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள், சமூக சேவையாளர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.



