Ads Area

சம்மாந்துறை பல்கலைக்கழக சுற்றுவட்டார மாலை நேர உணவகங்களில் விசேட கூட்டுப் பரிசோதனை!

 மஜீட். ARM.

 

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தொடர்ச்சியான முறைப்பாடுகளைத் தொடர்ந்து, சம்மாந்துறைப் பல்கலைக்கழக சுற்றுவட்டாரப் பகுதியில் அமைந்துள்ள மாலை நேர உணவகங்கள் நேற்று (08) திகதி விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.


பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை நுகர்வோர் மத்தியில் உறுதிப்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் , சம்மாந்துறைப் பொலிஸார் மற்றும் பிரதேச சபை கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து இந்த விசேட கூட்டு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.


குறித்த உணவகங்களின் தரம், தூய்மை மற்றும் சுகாதார விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆராய்ந்து, நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இந்நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe