Ads Area

காரைதீவு பத்திரகாளி அம்பாளின் மகோற்சவ தீமிதிப்பு வைபவம் ஆரம்பம்.

 (வி.ரி. சகாதேவராஜா)


வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த  மகோற்சவம் மற்றும்  தீமிதிப்பு வைபவம்  காலை 8.10 மணியளவில் கடல்நீர் கொணர்ந்து திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகவுள்ளது.


ஆலயபிரதமபூசகர் கி.சரவணபவா தலைமையில் நடைபெறவுள்ள மகோற்சவம், 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீமிதிப்புவைபவத்துடன்  நிறைவுபெறவுள்ளதென ஆலயதலைவர் கலாபூசணம் எஸ்..இராமநாதன் தெரிவித்தார்.


ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாற்குடபவனியும் , 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முத்துச்சப்பற ஊர்வலமும் இடம்பெறவுள்ளது.


மகோற்சவ காலத்தில் பகல் 12.30 மணிக்கும் இரவு 7.00 மணிக்கும் பூசைகள் நடைபெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe