Ads Area

வங்கியூடாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஐஸ் போதை*ப்பொருளை விநியோகத்த தம்பதி சம்மாந்துறை பொலிஸாரினால் கைது.

 பாறுக் ஷிஹான்.


ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த தம்பதிகளைக் கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்திய சம்மாந்துறை பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ஊழல் ஒழிப்புப்பிரிவு அதிகாரி எம்.றபாய்டீனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இந்நடவடிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) மாலை மேற்கொள்ளப்பட்டது.


இதன் போது குறித்த சம்பவத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த தம்பதிகள் உட்பட மற்றுமொருவருவரும் கைதாகியுள்ளார்.


இவர் பல்கலைக்கழக மாணவர் (வயது-23) எனக்குறிப்பிட்டுள்ள பொலிஸார் அம்மாணவன் மட்டக்களப்பு பகுதியைச்சேர்ந்தவர் என்பதுடன், ரூபா 12,000 செலவு செய்து ஐஸ் போதைப்பொருளை மேற்குறித்த தம்பதிகளினூடாக பெற வந்தவராவார். 


நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளத்தை சொந்த இடமாகக்கொண்ட இத்தம்பதி தோட்ட வேலை என்ற போர்வையில் 6 மாத காலமாக  சம்மாந்துறை பகுதி 40 வீட்டுத்திட்டத்தில் ஐஸ் போதைப்பொருட்களை விநியோகித்து வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இது தவிர 34, 42 வயதுடய இத்தம்பதிகள் 3 மாத காலமாக நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளத்தில் வீடொன்றினைப்பெற்று தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட கல்விக்கல்லூரி மாணவர்களை இலக்கு வைத்து தனியார் வங்கியூடாக ரூபா 10,000 ஐ0பெற்றுக்கொண்டு வாடிக்கையாக குறித்த போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளனர்.


சந்தேக  நபர்கள் வசமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், கைத்தொலைபேசிகள், 2 கிராம் 220 மில்லி கிராம், 500 மில்லி கிராம், 750 மில்லி கிராம் என ஐஸ் போதைப்பொருட்பொதிகள், வங்கிப்புத்தகம், பணம் செலுத்திய வங்கிச்சீட்டு என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.


வங்கியில் வைப்பிலிடப்படும் பணம் மற்றும் பண வைப்பிலிடும் நபர்களின் விபரங்கள் குறுஞ்செய்தியாக தம்பதியினரின் கையடக்க தொலைபேசிக்கு வந்தவுடன், போதைப்பொருள் சம்பந்தப்பட்ட நபருக்கு உடனடியாக விநியோகிக்கப்படும்.


இச்சம்பவத்தில் கைதான தம்பதியினர் உட்பட மற்றுமொருவர் சட்ட நடவடிக்கைகாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை கணவன் மற்றுமொரு சந்தேக நபரான மாணவனுக்கு தலா ரூபா 9,000 தண்டப்பணம் விதித்ததுடன், பெண்ணுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்து வழக்கினை மறுதவணை இட்டு ஒத்திவைத்தார்.


கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட  பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு கைது நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப்பிரிவுப்பொறுப்பதிகாரி எம்.றிபாய்டீன் தலைமையிலான பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe