சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறை வீரமுனை ராமகிருஷ்ண மகா வித்யாலய வரலாற்றின் சாதனைப் பயணத்தில், மற்றும் ஒரு மைல்கல்லாக அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையில் இம்முறை பாடசாலை மாணவர்கள் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
பாடசாலைக்கு பெருமை சேர்த்த இந்த சாதனையாளர்களைப் பாராட்டி கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று, (2026/06/23) செவ்வாய்க்கிழமை பாடசாலை வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்தக் கௌரவிப்பு நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திருமதி. கௌசல்யா கணேஸ்வரன் அவர்களின் தலைமையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உற்சாக வரவேற்புடன் ஆரம்பமாகி நடைபெற்றது.
இதன்போது, பரீட்சையில் சிறந்த சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை தேடித்தந்த மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டு, பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.









