மாவடிப்பள்ளி பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக சற்று முன்னர் அதிர்ச்சியை ஏற்படுத்திய கார் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக வந்த கார் ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது. அவ்வாறு விலகிய கார், அருகிலிருந்த காணி ஒன்றின் பாதுகாப்பு மதிலை பலமாக மோதி உடைத்துக் கொண்டு, வளவுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காரைதீவு பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

