சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி, மலையடிக் கிராமம்-01, 02, கல்லரிச்சல்-03 மற்றும் செந்நெல் கிராமம்-02 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்காக விசேட காணிக்கச்சேரியொன்று நடத்தப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில், உதவி பிரதேச செயலாளர் வீ. வாஸீத் அஹமட்டின் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த பிரதேசங்களில் விவசாயக் காணிகளைப் பராமரித்து நீண்ட காலமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மக்களின் பல வருடக் கோரிக்கைகளுக்குத் தீர்ர்வு காணும் நோக்கில் இக் காணிக்கச்சேரி முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச செயலாளரின் தீர்மானத்திற்கிணங்க, சுமார் 60 பயனாளிகளுக்குக் காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் ஆரம்பகட்ட நடவடிக்கையாக 2008 / 04 இலக்கச் சுற்றுநிருபத்திற்கு அமைவாக இந்நடவடிக்கை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் காணி உத்தியோகத்தர்களான ஐ.எல். லாபிர், ஆர். றமேஸ், ஏ.ஆர். நிசாப்டின் ஆகியோருடன் குடியேற்ற உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் காணிப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

