Ads Area

சம்மாந்துறை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.

சம்மாந்துறை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில், பிரதேச சபை கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.


இதன்போது, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மக்கள் தேவைகள் மற்றும் பிரதேசத்தின் அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு ஏற்ப தயாரிப்பது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.


இதில், பிரதேச சபையின் நிதி மற்றும் கொள்கை உருவாக்கக் குழு, சுற்றாடல் மற்றும் வாழ்வசதிகள் குழு, தொழில்நுட்ப சேவைக் குழு, வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்திக் குழு ஆகிய நான்கு குழுக்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு, தத்தமது துறைகள் சார்ந்த பல்வேறு ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.


குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


தகவல் மையம் 

சம்மாந்துறை பிரதேச சபை




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe