கிழக்கு மாகாண வரலாற்றிலேயே மிகப்பெரிய இலவசக் கண்புரை (Cataract) அறுவைச் சிகிச்சை முகாம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இலங்கை கண் மருத்துவ நிபுணர்கள் கல்லூரி மற்றும் Help Age Sri Lanka ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் சீரிய ஒருங்கிணைப்பில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையின் மூலம் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 530-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இலவசமாக கண்புரை அறுவைச் சிகிச்சை பெற்று, மீண்டும் ஒளிமயமான பார்வையைப் பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
அதிகாலை 4.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இம்முகாம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 100-வது நபருக்கான அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுற்றுள்ளது.
நூற்றுக்கணக்கானோரின் வாழ்க்கையில் புதிய ஒளியை ஏற்றி வைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதநேய சேவையை வெற்றிகரமாக முன்னெடுத்து வரும் இலங்கை கண் மருத்துவ நிபுணர்கள் கல்லூரி, HelpAge Sri Lanka, கண் மருத்துவ நிபுணர்கள், மயக்க மருத்துவர்கள், தாதியர்கள், வைத்தியசாலைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்!
“பார்வையை மீட்டெடுப்போம் – நம்பிக்கையை விதைப்போம்!”



