Ads Area

சம்மாந்துறை முகைதீன் மாவத்தை பாலத்தின் குறைபாடுகள் தொடர்பில் தவிசாளர் ஆய்வு.

சம்மாந்துறை முகைதீன் மாவத்தை பாலத்தின் அபிவிருத்திப் பணிகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக, பிரதேச மக்களின் கோரிக்கைக்கமைய சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.


அதற்கமைய, வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் வெற்றிவேல் வேற்குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் அதனுடன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சம்மாந்துறை நிலையப் பொறுப்பதிகாரி ஐ.எல்.எம்.பாஹிம்  ஆகியோரை குறித்த இடத்துக்கு கெளரவ தவிசாளர் நேரடியாக அழைத்துச் சென்று, அபிவிருத்திப் பணிகளில் காணப்பட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டினார்.


இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர் எஸ்.எல்.எம்.பஹ்மி, சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம்.முஸ்தபா ஆகி யோர்களும் கலந்து கொண்டனர்.


இதன்போது, குறித்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யதேவையான திருத்தப் பணிகளை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe