Ads Area

சம்மாந்துறை பிரதேசத்தில் நெல் அறுவடைப் பணிகள் நிறைவடையும் நிலையில் யானைப் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்.

சம்மாந்துறை பிரதேசத்தில் நெல் அறுவடைப் பணிகள் நிறைவடையவுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து, பொதுமக்களின் பெறுமதியான உயிர்கள் மற்றும் சொத்துக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் புதன்கிழமை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இதன்போது, யானைகள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுப்பது, பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது, யானை–மனித மோதலைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.


இக்கலந்துரையாடலில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், அம்பாறை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், சம்மாந்துறை பிரதேச செயலக அதிகாரிகள், மஜ்லிஸ் அஸ்ஸுறா,  விவசாய அமைப்புகளின் சம்மேளனம் மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


எதிர்வரும் காலங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரிக்கக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.


தகவல் மையம் 

சம்மாந்துறை பிரதேச சபை

0672030800








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe