(களத்திலிருந்து மின்மினி மின்ஹா)
புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் டெங்கு நோயை ஒழிக்கும் நடவடிக்கையில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து களமிறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக வீடுகள் தோறும் சுகாதாரப்பரிசோதனையும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் இன்று (10) நடைபெற்றன.
கௌரவ உப தவிசாளர் வெள்ளையன் வினோத்காந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்து செயற்பட்டன.
சிலோன் பிரிட்டிஷ் கல்லூரி, Voice of Future Sri Lanka, Change for Student Community ஆகியவற்றின் நிறுவுனரான வெள்ளையன் வினோத்காந்த், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளராகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளராகவும், அக்கட்சியின் கல்வி அபிவிருத்திப்பிரிவின் கிழக்கு மாகாண இணைப்புச்செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.
அறம் அமைப்பு, Voice of Future Sri Lanka, மாற்றத்திற்கான மாணவர்கள் அமைப்பு, வாரணம் நற்பணி ஒன்றியம், ஸ்ரீ நாவலர் சன சமூக நிலையம், வீனஸ் விளையாட்டுக்கழகம், நண்பர்கள் ஒன்றியம், உதவும் கரங்கள், கிரேஸ் பாடசாலை மற்றும் நியூ லைப் ஆகியன இதில் பங்கேற்றன.
1.கண்ணகி வீதி
2.அம்மன் வீதி
3.மத்திய வீதி
4.விபுலானந்த வீதி
5.ஸ்ரீ நாகதம்பிரான் வீதி. போன்றவைகளின் இரு மருங்கிலும் காணப்பட்ட பகுதிகளில் சுகாதார நிலைமைகள் பரிசோதிக்கப்பட்டதுடன், டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.
பொதுச்சுகாதாரப்பரிசோதகர் ஏ.எம்.எஸ். டீ. அத்தநாயக்க, கிராம சேவகர் எம்.உதயராஜன் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.
பிரதேச சபைத்தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையிலான ஊழியர்களும் வாகனங்களும் நடவடிக்கைக்கு ஒத்துழைத்தன.

