சம்மாந்துறை அன்சார்.
சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர், மறைந்த மர்ஹூம் M.H.M. அஷ்ரப் அவர்களின் காலம் தொடக்கம் கட்சியுடன் உறுதியுடன் பயணித்து, கொள்கையிலும் மக்கள் பணியிலும் தனது நிலைப்பாட்டை ஒருபோதும் விலைபோகாமல் காத்து வந்த மூத்த அரசியல் பிரமுகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ M.I.M. மன்சூர் அவர்கள்,
அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில், கட்சியின் பிரதி தலைவர் (Deputy Leader ) பதவிக்கு மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இது அவருடைய நீண்டகால அரசியல் பயணத்திற்கும், கட்சியின் மீதான அவருடைய அர்ப்பணிப்பிற்கும் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாகும்.
இதேவேளை, உயர்பீட உறுப்பினராக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், சிறிலங்கா முஸ்லிம் காங்ரஸின் தொண்டருமான நளீம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

