சம்மாந்துறை அன்சார்.
சில அரசியல் விசக்கிருமிகள் தனது வட்டார மக்களுக்கான பணியினை செய்ய விடாது தடுப்பதாக அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் சம்மாந்துறை வீரமுனை வீரமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.
சம்மாந்துறை உடங்கா - 02 பகுதியில் இயங்கி வரும் 'ஹனா மகளிர் சங்கத்தின்' மாதாந்த ஒன்று கூடல் நிகழ்வு நேற்று (16) சங்கத்தின் தலைவி ஏ. முஸத்திகா அவர்களின் இல்லத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
தனது வட்டார மக்களுக்கான பணிகளை பார்த்து பார்த்து செய்து கொள்ள முனைப்புக் காட்டும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சில அரசியல் விசக்கிருமிகள் மக்களுக்கான அரசியல் பணியினை செய்ய விடாது தடுத்து வருகின்றனர். மேலும் தன்னையும் தான் சார்ந்திருக்கும் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியினையும் இந்த அரசியல் விசக்கிருமிகள் மலினப்படுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான அரசியல் விசக்கிருமிகளின் மலினப்படுத்தும் செயற்பாடுகளுக்குள் பொதுமக்கள் அகப்பட்டு விடக் கூடாது எனவும் உரையாற்றினார்.
தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் கௌரவ றிஸ்விகான், ஹனா மகளிர் சங்கத்தின் சமூக நலச் செயற்பாடுகளைப் பாராட்டிப் பேசியதுடன், சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கட்சி சார்பாகவும், தனது தனிப்பட்ட ரீதியிலும் முழுமையாகச் செய்து தருவதாக உறுதியளித்தார்.
சம்மாந்துறை வீரமுனை வட்டாரப் பிரதேசத்தில் இயங்கி வரும் ஹனா மகளிர் அமைப்பானது, நீண்டகாலமாக அப்பகுதிப் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் பல்வேறு நலன்புரிச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



