2026 செப்டெம்பர் 19ஆம் திகதி சில மீன் வியாபாரிகள் பொது வீதியோரங்களில் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே சில வழக்குகள் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தொடர்ந்து வீதியோரங்களில் மீன் விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் பொது வீதியோரங்களில் மீன் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், எவ்வித சமரசமுமின்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, அனைத்து மீன் வியாபாரிகளும் நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் சுகாதார விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றி, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு பொதுமக்களும் வியாபாரிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

