சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறைப் பிரதேச சபையின் வீரமுனை வட்டார உறுப்பினர் கௌரவ றிஸ்விகான் அவர்களின் முயற்சியின் பலனாக ஆரம்பித்து வைக்கப்பட்ட சம்மாந்துறை ஜமாலியா குர்ஆன் மத்ரஸாவின் மீலாதுன் நபி விழா மற்றும் வருடாந்த நிகழ்வு நேற்று (06.09.2026) மத்ரஸா வளாகத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசல் இமாம் ஏ.ஜி.எம். சாக்கீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக சம்மாந்துறைப் பிரதேச சபையின் வீரமுனை வட்டார உறுப்பினர் கௌரவ றிஸ்விகான் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும், சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசல் நிர்வாகத்தினர், மௌலவிமார்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் போது மத்ரஸா மாணவ-மாணவிகளினால் பல்வேறு இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், அத்தீக் மௌலவி அவர்களினால் சிறப்பான மார்க்க சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது.
அத்துடன், நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் வெறும் 9 மாணவ-மாணவிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட சம்மாந்துறை ஜமாலியா குர்ஆன் மத்ரஸாவில், தற்போது 30க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் குர்ஆன் கல்வியை கற்று வருகின்றனர்.
குறித்த மத்ரஸாவின் தலைமை இமாமாக சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசல் இமாம் ஏ.ஜி.எம். சாக்கீர் அவர்கள் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மத்ரஸாவின் வளர்ச்சிக்கும், மாணவ-மாணவிகளின் மார்க்கக் கல்வி முன்னேற்றத்திற்கும் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.













