Ads Area

சம்மாந்துறை வலயத்தின் மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான மல்வத்தை விக்னேஸ்வராவில் இரு மாணவிகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி.

(வி.ரி. சகாதேவராஜா)


சம்மாந்துறை வலயத்தின் மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.


இதன்படி, ஐ. திலக்ஷிதா 153 புள்ளிகளையும், எம். லோஜிதா 142 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.


வசதிகள் மற்றும் வளங்கள் குறைவாகக் காணப்படும் இப்பாடசாலையில் இருந்து இரண்டு மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளமை பாடசாலைக்கும், மாணவிகளுக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்க்கும் விடயமாக அமைந்துள்ளது.


இத்தகவலை விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி எஸ். சந்திரமதி தெரிவித்தார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe