கமு / சது / விபுலானந்தா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக திரு. சோ. இளங்கோபன் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் கமு / சது / கோரக்கர் வித்தியாலயத்தில் பணியாற்றியதுடன், அங்கு கல்வி மற்றும் நிர்வாகத் துறைகளில் சிறப்பான சேவையை ஆற்றியுள்ளார்.
புதிய அதிபரின் கல்வி மற்றும் நிர்வாக அனுபவத்தின் ஊடாக, விபுலானந்தா மகா வித்தியாலயத்தின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்துவதுடன், மாணவர்களின் திறன்கள் மற்றும் ஆளுமை விருத்தி, பாடசாலையின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது வருகை பாடசாலை சமூகத்தினரிடையே புதிய உத்வேகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதுடன், புதிய பொறுப்பில் அவரது பணிப்பயணம் வெற்றிகரமாக அமைய பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.





