Ads Area

வீரமுனை வட்டார அம்பாறை 14ம் வீதியை அண்மித்த குறுக்கு வீதிகள் புனரமைப்பு.

சம்மாந்துறை வீரமுனை வட்டாரப் பகுதியில் உள்ள அம்பாறை 14ஆம் வீதியின் i-Road திட்டத்தின் கீழ் இடம்பெற்று வரும் புனரமைப்புப் பணிகளால், அதனை ஒட்டியுள்ள சில குறுக்கு வீதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து, குறித்த பிரச்சினையை அவ்வட்டாரத்திற்குப் பொறுப்பான சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் கௌரவ றிஸ்விகானின் கவனத்திற்கு பிரதேச மக்கள் கொண்டு வந்துள்ளனர். மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, குறித்த குறுக்கு வீதிகளில் மண் நிரப்பி அவற்றை புனரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இவ்விடயம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் கௌரவ பசிலிடம் தெரிவித்ததையடுத்து, பசில் அவர்களினால் இலவசமாக வீதிப் புனரமைப்புக்குத் தேவையான கிரஷர் மண் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.


மேலும், குறித்த வீதிப் புனரமைப்புப் பணிகளுக்கு அப்பிரதேச மக்களும் தங்களிடமிருந்த உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட வளங்களையும், ஆள்பலத்தையும் இலவசமாக வழங்கி முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.














Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe