பாறுக் ஷிஹான்.
சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலுமுருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத்தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கிக்கௌரவிக்கும் விசேட நிகழ்வு கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் (BMICH) சிறப்பாக இன்று (06) நடைபெற்றது.
சர்வதேச சமாதான அமைப்பின் ஏற்பாட்டில் உலகளாவிய ரீதியில் சமாதானம், சமூகப்பணி மற்றும் மனிதநேயச்செயற்பாடுகளுக்காகப்பங்காற்றிய சிறந்த 100 ஆளுமைகளைக்கௌரவிக்குமுகமாக இந்நிகழ்வு அமைக்கப்பட்டிருந்தது.
இதன்போது, நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட நேபாளத்தின் இலங்கைக்கான தூதுவரால் விருதுக்குத்தெரிவான சாதனையாளரான உலமாக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்திற்கு சர்வதேச விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சர்வதேச அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள், தூதரக உயரதிகாரிகள், சமூகப்பிரமுகர்கள் மற்றும் விருந்தினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

