Ads Area

அமீர் அலி பொது நூலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வாசிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் வழிகாட்டலில் 'வாழ்நாள் முழுவதும் - எழுத்தே நண்பன்' எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (2026.10.21) அமீர் அலி பொது நூலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.


இதன் போது, வாசிப்பின் மூலம் அறிவு, சிந்தனைத்திறன் மற்றும் ஆளுமை விருத்தியை மேம்படுத்தி அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்பும் கருப்பொருளைக் கொண்ட சுலோக அட்டைகளை மாணவர்கள் ஏந்திச் செல்லப்பட்டது.


இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.ஏ. மஜீட், உள்ளுராட்சி உதவியாளர் சல்மா எம். சதாத், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், நூலகர் ஏ.ஆர்.எம். இல்யாஸ், நூலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe