Ads Area

சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் புதிய பதில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராக கே.எல்.ஹம்சார் பொறுப்பேற்பு!

சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் புதிய பதில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராக, இலங்கை திட்டமிடல் சேவை தரம்-01 ஐச் சேர்ந்த கே.எல். ஹம்சார் அவர்கள் இன்று (21) பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா முன்னிலையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 


இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்-ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி), சம்மாந்துறை பிரதேச செயலகக் கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா, இறக்காமம் பிரதேச செயலகக் கணக்காளர் ஏ.எல்.எம். றிபாஸ் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமில் உள்ளிட்ட இறக்காமம் பிரதேச செயலகத்தின் பல உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 


சம்மாந்துறையைச் சேர்ந்த கே.எல். ஹம்சார் அவர்கள், 2004 ஆம் ஆண்டு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், 2005 ஆம் ஆண்டு அபிவிருத்தி உதவியாளராகவும் பணியாற்றியதுடன், 2008.12.22 ஆம் திகதி இலங்கை திட்டமிடல் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து லாகுகல, அம்பாறை கச்சேரி, சம்மாந்துறை, நிந்தவூர் மற்றும் இறக்காமம் ஆகிய பிரதேச செயலகங்களில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராகப் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe