Ads Area

MBBS பரீட்சையில் சிறந்த பேறுகளைப் பெற்றதற்காக தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்த மாணவி.!


கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் கட்ட MBBS பரீட்சையில் சிறந்த பேறுகளைப் பெற்றதற்காக, காரைதீவைச் சேர்ந்த சகாதேவராஜா டிவானுஜா "செல்லத்தங்கம் தம்பிப்பிள்ளை நினைவு தங்கப் பதக்கம் - 2026" விருதுக்கு தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சௌாக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் டி. வரகுணம் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வில், வேந்தர் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களிடம் இருந்து இத்தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.


காரைதீவு விபுலானந்த வீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா - நேசரஞ்சினி தம்பதியரின் இரண்டாவது புதல்வியே டிவானுஜா என்பது குறிப்பிடத்தக்கது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe