Ads Area

ஓடுற மாட்டிறைச்சி ஒரு சுவையான அலசல்..........

சம்மாந்துறை! அழகிய கிராமம்.  மக்களில் மட்டுமல்ல இறையளித்த இயற்கையின் கொடைகளிலுமே.அன்றைய மட்டக்களப்பு (இன்றைய சம்மாந்துறை) அராபிய ,இந்திய வெளிநாட்டு வர்த்தகர்களின் பண்டமாற்று சந்தையாகவும், மத்திய மலை நாட்டு மக்களிற்கான வியாபாரப் பாதையாகவும், தாவளம் முறை வியாபாரம் நடைபெற்ற புராதன செரண்டீப் இனது முக்கிய தலமாகவும் காணப்பட்டது.
இங்குள்ள மக்கள் வீரத்திலும் விவேகத்திலும் விஞ்சியவர்களே, அதேபோன்று இவர்களின் உணவுப்பழக்க வழக்கமும் விருந்தோம்பலும் சிறப்பானதே.........சம்மாந்துறை கல்வி, விவசாயத்திலும் மட்டுமல்ல கால்நடை வியாபாரத்திற்கும் பெயர்பெற்ற இடமாகும் 
அந்த வகையில் இங்குள்ள பெரும் மாட்டுப் பண்ணையாளர்களிடம் இறைச்சி வியாபாரிகளும், புனித காலங்களில் தானம் வழங்குபவர்களும் தேவையான மாடுகளை வாங்கினர்.
இங்கு மாடுகளை தெரிவு செய்யும் நடைமுறை இவ்வாறிருந்தது அதாவது
காலையிலுள்ள மாடுகளிற்கு மத்தியில் மாட்டுக்காரர் சென்று நின்று கொண்டு கயிறொன்றை சுழற்றுவார். அப்போது உற்சாகமானதும் ,ஆரோக்கியமானதுமான துடிப்பான மாடுகள் காலையிலிந்து வெளியேறுவதற்காக சுற்றி ஓடிக்கொண்டிருக்கும்.
அதன்போது அவற்றில் மிகச் சிறந்த மாட்டை கொள்வனவாளர் சுட்டிக்காட்ட  மாட்டுக்காரரோ அதற்கு தொண்டை வீசிப்பிடிப்பார் (இந்தத் தொண்டு வீசுதல் மிக சாமர்த்தியமானதொரு திறனாகும்). பிடிக்கப்பட்ட மாட்டை அவர்கள் வாங்கிக் கொண்டு அவற்றையே உணவுக்காகவும், தானம் வழங்கவும் பயன்படுத்தினர். 
நோய்வாய்ப்பட்ட மாடுகளையும் , மெலிந்தவற்றையும் விட்டு விடுவர்.இதனாலேயே இவர்கள்  "ஓடுற மாட்டில இறைச்சி எடுத்து தின்பவர்கள்"  என அழைக்கப்பட்டனர்.
காலப்போக்கில் இது அவர்களை இகழ்ச்சிக்காக அழைக்கும் குறிசொல் எனத்தவறாகப் புரியப்பட்டது.
இவர்கள் மக்களை இகழ்வதாக எண்ணிப் புகழ்வது முரண்நகையே....

குறிப்பு - இங்குள்ள மாட்டுப் பண்ணையாளர்கள் மற்றும் தேர்ச்சி பெற்ற இடையர்கள் மாடுகள் நடந்து செல்லும் போதே அவற்றிலிந்து பெறக்கூடிய இறைச்சி, ஈரல் போன்ற பாகங்களின் நிறைகளைத் துல்லியமாக பார்வையினாலேயே கணிக்கக்கூடியவர்களாக உள்ளனர்
நடந்து செல்லும் போதே இறைச்சிக கணக்குச் சொல்லக்கூடிய தேர்ச்சியின் காரணமாகவும் இவர்கள் ஓடுற மாட்டில் இறைச்சி எடுத்துத் தின்பவர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்ற கருத்து நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.

காலை :-பெருமளவான மாடுகள் தங்கவைக்கப்படும் எல்லைப்படுத்தப்பட் பகுதி அல்லது மாடுகளின் கூட்டம், தொழுவம் போன்றது 

தகவல்கள்:- மூத்த கால்நடை கிராம வைத்தியர் காஸீம் பாவா இஸ்மாலெப்பை  (வயது 82)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe