Ads Area

காங்கிரசின் வெற்றி சம்மாந்துறையின் வெற்றி

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் எங்கள் ஒவ்வொரு வாக்குகளும் எமதூரின் அபிவிருத்திக்கு இன்றியமையாததாகும் என்பது யாவரும் அறிந்ததே .. அப்படியானால் நாம் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பதுதான் நாம் ஒவ்வொருவரும் கேட்கும் கேள்வி ???

இந்தக் கேள்விக்கான சரியான பதில் ... ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான்

ஏன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் ?

நமதூரை அடுத்த கட்ட அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்லும் சரியான திட்டத்தை  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டுமே தெளிவான தேர்தல் விஞ்ஞாபனமாக வெளியிட்டுள்ளது யாவரும் அறிந்ததே !

இதை நம்பலாமா ???  இதை நம்பியே ஆகவேண்டும் இது காலத்தின் தேவை

அப்படிப் பெரிய என்ன அபிவிருத்தி ??

சம்மாந்துறை - கல்முனை பாரிய நகர அபிவிருத்தித் திட்டம் என்பது நாம் இது வரை நினைக்காத ஒன்று. இந்த திட்டம் தற்போது இலங்கை - சிங்கப்பூர் நகர அபிவிருத்தி வல்லுனர்களால் தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றது .

இந்த திட்டத்தால் நமதூரின் பொருளாதாரத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுவதோடு ஏராளமான தொழில் வாய்ப்புக்களுக்கும் சந்தர்ப்பம் இருப்பதால் இது ஒரு வரமாகவே பார்க்கப்படுகின்றது.

இந்த ஒரு பெரிய வரப் பிரசாதத்தைப்  பெற்றுக்கொள்ள நமது வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸுக்கே  அளிப்போம். அதுமட்டுமல்ல, நவீன பஸ் நிலையம், தொழில் பேட்டைகள், பூங்காக்கள் மற்றும் சம்மாந்துறையை அழகு படுத்தும் அனைத்துத் திட்டங்களையும் நமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியே வாக்குறுதி செய்துள்ளது. அதை அவர்கள் செய்யாவிட்டால் 
அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டலாம்.

என் பெயர் மாஹிர் மொஹிடீன். நான் சம்மாந்துறையை நேசிப்பவன் மட்டுமல்ல அதை சுவாசிப்பவனும் கூட. சம்மாந்துறையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகத்தூரத்தில் இருந்து கவனித்துக்கொண்டிருக்கின்றவன் என்ற முறையில் நாம் நமது கனவுகளை வென்றெடுக்க இம்முறை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே வாக்களிப்போம்.

தனிப்பட்ட வெறுப்பு 

சில முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுடனோ, அங்கத்தவர்களுடனோ அல்லது நமது எம்பி மன்சூர் அவர்களுடனோ ஏன் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடமோ உங்களுக்கு அல்லது உங்களது குடும்ப அங்கத்தவர்களுக்கு சில கோபதாபம் இருக்கலாம் அந்தத் தனிப்பட்ட கோபதாபத்துக்காக நமதூரின் வளர்ச்சியை நாம் குழி தோண்டிப் புதைப்பதா ? இது மாதிரி சந்தர்ப்பம் இனிமேல் நமக்கு கிடைக்குமா என்பது என்னைப்பொறுத்தவரை ஒரு கானல் நீராகவே உள்ளது. ஆதலால் நமது மறைந்த தலைவர் சம்மாந்துறை ஈன்றெடுத்த தவப்புதல்வன் அஷ்ரப் அவர்கள் சொன்ன ஒரு வாக்கியத்தை இங்கே ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் ....கருத்து வேறுபாடு என்னும் கறையான்கள் வந்து உங்கள் புரிந்துணர்வை சீரழிக்கும் மிகவும் புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.

அதனால் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் நாம் அனைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் யானைச்சின்னத்துக்கே வாக்குகளை அளித்து சம்மாந்துறையை அடுத்த கட்ட  அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்வோம் 

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe