அன்சார் - சம்மாந்துறை.
சம்மாந்துறையின் வைத்தியத்துறையில் சுமார் 94 வருட கால பழமை வாய்ந்த வைத்தியசாலை என்றால் அது நமது சம்மாந்துறை வைத்தியசாலைதான். இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளில் தரம் - B பிரிவில் உள்ள ஆதார வைத்தியசாலைகளில் நமது சம்மாந்துறை வைத்தியசாலையும் ஒன்றாகும்.
இது தரம் - B பிரிவில் உள்ள ஆதார வைத்தியசாலையானாலும் மிக குறைந்த அளவிலான தொழில்நுட்ப, மருத்துவ உபகரணங்களை வைத்துக் கொண்டு இலங்கையே வியந்து பார்க்கும் அளவுக்கான சத்திரசிகிச்சைகளும் நமது சம்மாந்துறை வைத்தியசாலையில் மேற் கொள்ளப்பட்டுள்ளது, படுகின்றது இது தொடர்பாக ஊடகங்களில் பெருமை மிகு செய்திகளும் வெளிவந்ததை நீங்கள் யாவரும் அறிந்திருப்பீர்கள்.
இவ்வாறான சாதனை மிக்க சேவைகளை நமது வைத்தியசாலை செய்கின்ற போதும் பல்வேறுபட்ட பழிச்சொற்களுக்கும் ,விமர்சனங்களுக்கும் ஆளாகாமலும் இல்லை. பழிச்சொற்களையும், எதிர்மறையான விமர்சனங்களையும் வைத்திசாலை தொடர்பாக முன் வைக்கும் நாம் வைத்தியசாலைக்குச் செல்லும் போது நமது வைத்தியசாலையின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கின்றோமோ..??? வைத்தியசாலையில் நாகரீகத்தை பின்பற்றுகின்றோமோ..?? போன்ற விடயங்களை பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
நம்மில் எத்தனை பேர் கீழே தரப்பட்டுள்ள வைத்தியசாலையின் சட்டதிட்டங்களையும், ஒழுக்க கோவைகளையும் பின்பற்றி நடக்கின்றோம் என்பதை தனித்தனியே நம் மனதோடு கேட்டுக் கொள்வோம், நம் தவறுகளை திருத்திக் கொள்வோம்.
01. நம்மில் ஒரு சிலர் நமது வைத்தியசாலையின் பார்வையாளர் நேரங்களில் மக்களுக்கு இடைஞ்சல் தரும்படியாகவே நமது வாகணங்களை தரித்து (Parking) வைக்கின்றோம் இது வைத்தியசாலையின் அம்பியுலன்ஸ் வாகணங்கள் மற்றும் ஏனைய வாகணங்கள் விரைவாக செயற்படுதவற்கு கூட தடையாக உள்ளது, நம்மில் எத்தனை பேர் நமது வாகணங்களை முறையாக பாக் பண்னுகின்றோம்...???
02. வைத்தியசாலையில் உட் செல்வதற்கும் வெளிச் செல்வதற்கும் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள பாதைகள் இருந்தால் உட் செல்லும் வழியால் வெளியும், வெளிச் செல்லும் வழியால் உள்ளும் செல்கின்றோமே நாம் சரியான முறைப்படி உட்சென்று வெளிச் செல்கிறோமா..?? இல்லையே.
03. அம்பாறை வைத்தியசாலை நிர்வாகம் நோயாளர்களை பார்வையிடும் விடையத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, ஒரு நோயாளரை பார்வையிட ஒருவர் அல்லது இருவர் மாத்திரமே அங்கு அனுமதிக்கப்படுவர் ஆனால் நமது சம்மாந்துறை வைத்தியசாலையில் மக்களின் நலனுக்காக (காலை 6.00-700) (பகல் 12.00-1.00) (மாலை 5.00-6.00) என நேரம் ஒதுக்கப்பட்டு சகலரும் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர் இதனை நாம் தவறாக பயண்படுத்தி பார்வையாளர்களுக்கான நேரம் முடிந்த பின்னர்தான் நாம் நோயாளர்களை பார்வையிட வருகின்றோம் அந்த நேரம் காவலாளி எல்லோரையும் வெளியேற்ற முயற்ச்சி செய்யும் போது அவரோடு கடிந்து கொள்கின்றோம். நம்மில் எத்தனை பேர் இந்த விடையத்தில் ஒழுக்கத்தைப் பின்பற்றுகின்றோம்...??
04. வைத்தியசாலையில் நமக்கு கிடைக்கப் பெற்ற இலக்க ஒழுங்கின்படிதான் வைத்தியரிடம் செல்ல வேண்டும் இதுதான் முறை ஆனால் நம்மில் சிலர் சிபாரிசின் அடிப்படையில் இடையில் வந்து நுழைந்து கொள்கின்றார்கள் இது நேரத்தோடு வந்து காத்திருப்பவர்களுக்கு செய்யும் பெரிய அநியாயமாகும் அப்படியானவர்களை தட்டிக் கேட்டால் கூட நச்சரிக்கின்றார்கள் நம்மில் எத்தனை பேர் நமக்குத் தரப்பட்ட இலக்க ஒழுங்கின் படி அல்லது நாம் வந்த நேர முறைப்படி வைத்தியரை அனுகுகின்றோம்...???
நமது வைத்தியசாலையானது படித்தவர்கள், பாமரர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள், செல்வந்தர்கள் என எல்லோருக்கும் பொதுவானது அங்கே நாம் முறை தவறி நமது செல்வாக்கைப் பயண்படுத்தி சேவைகளை பெற்றுக் கொள்கின்றோமே இது நீதியானதா-முறையானதா...???
05. நோயாளர்களை வைத்தியசாலையில் இருந்து டிஸ்சார்ஜ் பண்னும் போது அதெற்கென்ற ஒழுங்கு முறையில்தான் அவர்களை வைத்தியசாலையில் இருந்து டிஸ்சார்ஜ் பண்ண வேண்டும் ஆனால் நம்மில் சிலர் டிஸ்சார்ஜ் என்றதுமே வீடுகளுக்கு செல்வதற்கு மிகவும் அவசர அவசரமாக ஆயத்தமாகி வைத்தியர்களை அவசரப்படுத்துகின்றார்கள் அந்த நேரம் புதிதாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை கவனிப்பதில் வைத்தியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. இந்த விடையத்தில் கூட நாம் அவசரப்படாமல் பொறுமை காக்கின்றோமா..???
06. OPD மருந்து கொடுக்கும் இடத்தில் கூட்டமாக கும்பலாக பதறியடித்து மருந்து எடுக்கின்றோமே, தனித் தனியாக ஒவ்வொருவராக தங்களுக்கு எழுதிதரப்பட்டுள்ள மருந்துகளை எடுக்கின்றோமா..??
07. OPD மருந்து கொடுக்கும் இடத்தில் மருந்து கொடுப்பதற்கு என்று குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் மாத்திரம் மருந்து எடுக்கச் செல்ல வேண்டும் அதாவது வாரநாட்களில் 8am - 12pm, 2pm-4pm சனி, ஞாயிறு,விடுமுறை தினங்களில் 8am-12pm.வரை ஆனால் நாம் நினைத்த போதெல்லாம் மருந்து எடுக்கச் சென்று சண்டை பிடிக்கின்றோம் குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரம் நாம் மருந்துகள் எடுக்கச் செல்கிறோமா...??
08. வைத்தியசாலை என்பது சுத்தம் சுகாதார விடயத்தில் மிக பேணுதலாக இருக்க வேண்டிய ஒரு இடமாகும் ஆனால் நாம் அங்கு கண்ட நிண்ட இடத்தில் வெற்றிலை-பாக்கு எச்சிலை துப்புகின்றோம், புகைப்பிடித்த மீதி சிகரட்டை அங்கும் இங்கும் வீசுகின்றோம் இந்த விடையத்தில் நம்மில் எத்தனை பேர் ஒழுக்கத்தைப் பேணுகின்றோம்...??
09. நமது வைத்தியசாலையில் ஒரு சில நோயாளர்களுக்கு மாத்திரம் அவரது கூடவே தங்குவதற்கு உறவினர் ஒருவர் அனுமதிக்கப்படுவர் இது நோயாளியின் அவசிய தேவை கருதியே ஆனால் இதனை நம்மில் சிலர் தவறாகப் புரிந்து கொண்டு தாமும் தங்க அனுமதி கோரி சண்டை பிடிக்கின்றோம் அனுமதி மறுத்தால் கூட அதனை ஏற்காமல் நோயாளியின் கூடவே அவரது கட்டிலிலேயே நாமும் தங்கி தொந்தரவு செய்கின்றோம் இதனால் அங்கு நோயாளர்கள் யார், பார்வையாளர்கள் யார் என்பதை கண்டு பிடிப்பதே சிரமமாகவுள்ளது. இந்த விடையத்திலாவது நாம் வைத்தியசாலையின் ஒழுங்கை பின்பற்றுகின்றோமா..??
10. வைத்தியசாலை கதிரைகளில் அமரும் போது அவைகளுக்கு சேதம் விளைவிக்காமல் அதாவது கதிரையை கீறாமல், உள்ளே இருக்கும் பஞ்சை சுரண்டி வெளியே எடுக்காமல் அவற்றை பாதுகாக்க வேண்டும் ஆனால் நாம் அப்படிச் செய்கின்றோமா..??? பொதுச் சொத்தைப் பாதுகாக்கின்றோமா..?? இல்லையே கதிரையின் பஞ்சை சுரண்டி அல்லவா எடுக்கின்றோம்.
11. வைத்தியசாலையின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள பூந்தோட்டம், மரக்கன்றுகள், பூச்சாடிகள் போன்றவற்றுக்கு மேலாகா நடந்து செல்லாமல் அவற்றின் மேல் வெற்றிலையை மென்று துப்பாமல் அவற்றை நல்ல முறையில் பாதுகாக்க நாம் முனைய வேண்டும் ஆனால் நம்மில் எத்தனை பேர் அந்த பூந்தோட்டத்துக்கு மேல் அமராது இருக்கின்றோம்...??? அவற்றுக்கு சேதம் ஏற்படுத்தாமல் இருக்கின்றோம்.??? அங்கே உள்ள பூக் கன்றுகள் மீது எச்சில் துப்பாமல் இருக்கின்றோம்..??
12. ஒரு குழந்தை பிறந்து விட்டால் ஒட்டுமொத்த குடும்பமும் வந்து அந்த பிஞ்சுக் குழந்தையை அள்ளி மாறி மாறி துாக்கி கொஞ்சி குதுாகளிக்கின்றோம் அதனால் அந்தக் குழந்தைக்கு நோய்த்தாக்கம் ஏற்பட நிறைய வாய்ப்பு உண்டு இதனை வைத்தியர்கள் பல தடவை அறிவுறுத்தியும் அவற்றை நாம் மதித்து நடந்து பேணுதலாக இருப்பதில்லை இவ்வாறு செய்யாமல் பேணுதலாக நாம் இருக்கின்றோமா..???
13. கிளினிக் நாட்களில் அதிகாலை 4.00 மணிக்கு அல்லது இரவைக்கு வந்து காத்திருத்தல். காலையில் வருபவர்களில் யாரும் முந்தினால் சண்டைபிடித்தல், யாராவது நோயுற்று வந்தால் கதிரைகளிலும் தூக்கமில்லாமலும் காத்திருப்பது அவர்களின் வருத்தத்தை இன்னும் கூட்டுமல்லவா..??? இவைகளை நம்மில் எத்தனை பேர் தவிர்ந்து நடக்கின்றோம்...???
14. வைத்தியசாலை சிற்றுாழியர்கள் ஏசுகிறார்கள், நாகரீகமற்று நடக்கின்றார்கள் என்று நாம் அவர்களை காரசாரமாக குறை கூறுகின்றோமே அவர்களை எரிச்சலுாட்டாதபடி, அவர்கள் கோபப்படாதபடி நாம் நடந்து கொள்கின்றோமா..??? அவர்கள் நமது நலனுக்காக கூறும் விடையங்களை நாம் ஒரு போதும் பொறுப்படுத்துவதில்லையே.
15. வைத்தியசாலையில் அங்கும் இங்கும் கூட்டம் கூட்டமாக குழுமியிருந்து வெட்டிக் கதைகள் பேசுகின்றோம் வெட்டிப் கதைகள் பேசுகின்ற இடமா வைத்தியசாலை...??? இது தவறு என்று நமக்கு தெரியவில்லையா...??
முகநுால்வாயிலாகவும், இணையத்தளங்கள் வாயிலாகவும் நாம் நமது சம்மாந்துறை வைத்தியசாலை விடயத்தில் பல குறைகளை கூறிக் கொண்டிருக்கின்றோம் குறை கூறுதல் என்பது நிறைகள் வருவதற்கான வழிகள்தான், ஒன்றை நோக்கியதான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால் அது விடயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும், விமர்சனங்கள்தான் ஒன்றை மேலும் மேலும் வளப்படுத்த உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை அதன் அடிப்படையில் வைத்தியசாலை விடயத்தில் நாம் முன் வைக்கும் குற்றச் சாட்டுக்கள் நியாயமானதாக இருந்தாலும் வைத்தியசாலை விடயத்தில் நாம் எவ்வாறான நடத்தையோடு இருக்கின்றோம், மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றை காதில் வாங்கி மனதில் இருத்தி எந்தளவுக்கு வைத்தியசாலைக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக சிந்திக்க வேண்டியுள்ளது.
சம்மாந்துறை வைத்தியசாலையை மிகச் சிறந்த மக்கள் மருத்துவ சேவை மையமாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் இது ஒரு குறித்த பிரிவினருக்கு மாத்திரம் உரிய வைத்தியசாலை கிடையாது இது நமக்கான வைத்தியசாலை இதன் வளர்ச்சிக்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டியது நமது தலையாய கடமை.
இதன் அடிப்படையில்தான் நமது சம்மாந்துறை வைத்தியசாலையின் குறை-நிறைகளை அலசி ஆராய்ந்து வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எத்தி வைத்து அவர்களின் காத்திரமான நடவடிக்கைள் ஊடாக சிறந்த பயணைப் பெற்றுக் கொள்ள “சம்மாந்துறை வைத்தியசாலை நலன்விரும்பிகள்” என்ற புதிய அமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் குழு மூலமாக அங்கத்தவர்கள் இணைக்கப்பட்டு அவர்களுக்கென்று ஒன்லைன் விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்பட்டு சிறப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்த அமைப்பினரின் முதலாவது கன்னிக் கூட்டம் அண்மையில் சம்மாந்துறை ஹிஜ்ரா பள்ளிவாசல் மேல்மாடியில் நடைபெற்றது இதில் பெருந்திரளான நமது சம்மாந்துறை வைத்தியசாலை நலன்விரும்பிகள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள், மேலும் இந்த அமைப்பை உத்தியோகபூர்வ அமைப்பாக மாற்றுவதற்காக நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நீங்களும் சம்மாந்துறை வைத்தியசாலை நலன்விரும்பிகள் வாட்ஸ்அப் குழுவில் இணைந்து கொள்ள ஆசைப்பட்டால் இந்த லிங்கின் ஊடாக இணைந்து கொள்ளலாம்.
https://chat.whatsapp.com/3vaimzI6NN7H8Wp1AxnS02
இந்த விழிப்புணர்வு பதிவை எழுதுவதற்கு துணை புரிந்த வைத்தியர்களான,
Dr. Ziyad
Dr. Riswan
Dr. Risfan
ஆகியோருக்கு அன்புமிக்க நன்றிகள்.
மேலே குறிப்பிட்ட விடையங்கள் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு மாத்திரமல்ல எல்லா வைத்தியசாலைகளுக்கும் பொருந்தும் படியான எல்லோரும் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்க விதிமுறைகளாகும்.