சீன அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையில் உள்ள 13 வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன இதில் சம்மாந்துறை வைத்தியசாலையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சீன அரசாங்கத்தின் நிதியுதவிடன் அபிவிருத்தி செய்யப்பட்ட மீரிகம தள வைத்தியசாலையினை திறந்து வைக்கும் நிகழ்வின் போது சுகாதார அமைச்சர் ராஜித இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.