Ads Area

ஒரே ஒரு தமிழ் பேசும் பிரதிநிதியாக சம்மாந்துறையைச் சேர்ந்த இளைஞன் உலக இளைஞர் மாநாட்டுக்குப் பயணம்

ஏ.அகீல் சிஹாப்.

உலக நாடுகளின் இளம் தலைவர்கள் பங்கு கொள்ளும் மாநாட்டுக்கு இலங்கை தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு தமிழ் பேசும் பிரதிநிதியாக சம்மாந்துறையைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்திய மாணவனும், அரசியல் விஞ்ஞான கலைமாணி பட்டதாரியுமான அப்துல் றஸாக் அஸ்ஸாம் ஜப்பான், சிங்கபூர் போன்ற நாடுகளுக்குப் பயணமாகியுள்ளார்.

ஜப்பான் அரசாங்கத்தினால் 1969 ஆம் ஆண்டிலிருந்து உலக இளம் தலைவர்களை ஒன்றினைப்பதற்கும், தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதையும் நோக்காக கொண்டு, கடல் மார்க்கமாக உலக நாடுகளுக்கு விஜயம் செய்யும் இவ் இளைஞர் நிகழ்ச்சித் திட்டமானது இவ் வருடமும் 30ஆவது தடவையாக Word Ship for Youth எனும் தொணிப் பொருளில் 15ம் திகதி ஆரம்பமானது.

இம் மாநாட்டிற்கு இலங்கையில் இருந்து பங்குபற்றும் சம்மாந்துறையைச் சேர்ந்த அஸ்ஸாம் தெற்காசியாவின் அதிக இளைஞர் அங்கத்துவத்தைக் கொண்ட இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவரும், சம்மாந்துறை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவரும், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அம்பாறை மாவட்ட இளைஞர் கழக சம்மேளத்தின் தலைவருமாவார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe