சம்மாந்துறை அமீர் அலி சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களான ஊஞ்சல்களின் சங்கிலிகள் சில அறுந்து விழும் நிலையில் உள்ளது இதனை பொறுப்பு வாய்ந்த சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தி அதனால் சிறுவர்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்தை முன்கூட்டி தடுத்து நிறுத்த வேண்டும்.
சம்மாந்துறையில் உள்ள சிறுவர்களுக்கான உற்சாக விளையாட்டு இடமாகவும், பெரியோர்களுக்கு மன அமைதிக்கான இடமாகவும் இருந்து வருவது சம்மாந்துறை அமீர் அலி சிறுவர் பூங்காவும் அதனோடு அண்டிய இடங்களுமாகும்.
இங்கே ஒவ்வொரு நாளும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சகிதம் வருகை தந்து கொஞ்சம் இளைப்பாறிச் செல்கின்றார்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கே பெரும்பாலானோர்களைக் காணலாம். இங்கே சிறுவர்களுக்கான விளையாட்டு உபரகணங்கள் நிறையவே பொறுத்தப்பட்டு அவர்கள் உச்சாகமாக விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017-12-08 அன்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க சம்மாந்துறை அமீர் அலி சிறுவர் பூங்கா நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் நிதி ஒதுக்கீட்டில் பல நவீன விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டும் உள்ளது.
இங்கு ஆரம்பத்தில் ஏற்கனவே பொறுத்தப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களில் சிலவைகள் மிகவும் பழுதடைந்து, துருப்பிடித்து, கம்பிகள் அறுந்து உடனடியாக மாற்றம் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது குறிப்பாக ஊஞ்சல்கள் மாற்றம் செய்யப்பட வேண்டும், ஊஞ்சல்களின் சங்கிலிகள் நுாலளவில் அறுந்து விழும் அபாயத்தில் இருக்கின்றது, மற்றும் கரல் பிடித்துப் போயும் உள்ளது அது மட்டுமல்ல தகரங்கள் சிலவும் சேதமாகியுள்ளது.
இவற்றில் சின்னஞ் சிறுவர்கள் வேகமாக உயரமாக ஊஞ்சல் ஆடும் போது அவை அறுந்து விழுந்தால் நிலமை என்னவாகும்...???
ஆகவே....சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதற்குப் பொறுப்பானவர்கள் இது விடையத்தில் கவனம் செலுத்தி உடனடியாக இதனை நிபர்த்தி செய்து ஆபத்தை முன்கூட்டியே தடுக்க வேண்டும் அத்தோடு அங்கே தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்களும் இது விடையத்தில் அவதானமாக இருந்து ஆபத்துக்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
தகவல் - நபீல் நயீல்.
பட உதவி - நபீல் நயீல் மற்றும் அன்சார் (மக்கள் நண்பன்)
அறுந்து விழும் நிலையில் உள்ள மாற்றப்பட வேண்டிய பழைய விளையாட்டு உபகரணங்கள்.
புதிதாக பொறுத்தப்பட்டுள்ள சில விளையாட்டு உபகரணங்கள்.