தகவல் - அமீர் முஹம்மத்
சம்மாந்துறை வலயத்திற்குட்பட்டதும் நாவிதன்வெளி கோட்ட மட்டத்திற்குட்பட்டதுமான வீரத்திடல் அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தில் இர்ஷாட் ஏ காதர் நற்பணி மன்றத்தின் அனுசரணையில் இடம்பெற்ற அல்குர்ஆன் கிராஅத் ஓதல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் கல்லூரி அதிபர் ஜனாப் எம்.எல்.பதியுத்தீன் தலைமையில் கல்லூரி ஆராதனை மண்டபத்தில் இன்று 2018-02-25 இடம்பெற்றது.
இப் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக இர்ஷாட் ஏ காதர் நற்பணிமன்ற ஸ்தாபகரும் சிரேஷ்ட வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளருமான இர்ஷாட் ஏ காதர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் பரிசில்கள் தங்கப்பதக்கங்கள் அல்குர்ஆன் பிரதிகள் என்பவற்றை வழங்கி வைத்ததுடன் நடுவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்து நிகழ்வில் பேச்சாளராகவும் கலந்து கொண்டார்.
மேலும் இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக அகில இலங்கை சமாதான நீதவானும், கலைஞரும், தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையில் பொறியிலாளராகவும் கடைமையாற்றும் அமீர் முஹம்மட் அவர்களும் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவிக்கு புனித அல்குர்ஆன் சான்றிதழ் பரிசு என்பவற்றை வழங்கி கௌரவித்தார்கள்.
நிகழ்வின் இறுதியில் இறுதியில் பிரதம அதிதிக்கு ஊரார்கள் உலமாக்கள் கல்விச்சமூகம் அனைவரும் அவரின் சேவையைப் பாராட்டி பொன்னாடையையும் போர்த்திக் கௌரவித்தனர்.










