நன்றி (இவண் ஆவணன் - சாஹிர்)
இலங்கைத் தீவானது அதன் வனப்பு, புவியியல் அமைவு,மற்றும் காலநிலைப் பல்வகைத்தன்மை, போன்ற காரணிகளால் அன்றும் இன்றும் உலகின் பல்வேறு ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றதொரு விசித்திரம் மிக்க நாடாக அமைந்துள்ளது.
இவ்வாறு சிறப்பு மிக்க எம் நாட்டை கி.பி.1505லிருந்து போர்த்துக்கேயரும், கி.பி.1658ல் ஒல்லாந்தரும், கி.பி1815இலிருந்து பிரித்தானியரும் தம் வசப்படுத்தி ஆட்சியை மேற்கொண்டனர். மக்களைப் பல்வேறு வகையிலும் அடிமைத்தனங்களுக்கு உள்ளாக்கிக்கினர், குடிமக்களைப் பாரபட்சமின்றி அழித்தும் வந்தனர். இந்நிலமைகளில் மக்கள் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று வேறுபாடின்றி நாட்டிற்க்காக ஒன்றிணைந்து போராடி வந்தனர்.
தொடர்ச்சியான முயற்சிகளும் செயற்பாடுகளுமே 1948-02-04 யில் ஐரோப்பிய ஆக்கிரமிப்பிலிருந்து நாம் சுதந்திரத்தைப் பெறுவதற்கு வழி சமைத்ததாக அமைந்ததுசுதந்திர போராட்ட வீரர்கள் சம்மாந்துறைத் தளபதி அவூபக்கர் ஈஸா முகாந்திரம் வீரமுனை கந்தப்போடி போன்றவர்கள் நமது மண்சார்பாகப் போராடியுள்ளனர் பல்லாயிரமாண்டு வரலாற்றைக் கொண்ட எம் இரத்தினதுவீபமானது பூலோகத்தின் சுவனபுரியாக வர்ணிக்கப்படுகின்றது. தொன்று தொட்டு பல்லின மக்கட்பல்வகைமை நிலவும் இந்நித்திலத்தில் இவர்களின் சகவாழ்வும் அந்நியோன்னியமும் பரஸ்பர உறவுகளாகவே காணப்பட்டது.
ஆனால் எம் சுதந்திர உறவிலும் நிலத்திலும் கி.பி.1505 இலிருந்து ஐரோப்பிய ஆக்கிரமிப்புக் கறைகள் படியத் தொடங்கின. இவ் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் பொருளாதார மற்றும் சுயலாபங்களுக்காக இனங்களுக்கிடையில் முறுகல்களை ஏற்படுத்துவதையும், பிரித்தாளும் இராஜதந்திரங்களுடாகவும் தங்களின் கைங்கரியத்தையும் வெகு இலாவகமாக பயன்படுத்தினர்.
இக்கால கட்டத்தில் நாட்டைக் காக்கும் பணியில் சிங்களவர், தமிழர்.முஸ்லிம்கள் அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் தம் மன்னர்களுடன் இணைந்து அந்நியரை எதிர்த்தனர்.
ஏறத்தாள 4 நூற்றாண்டுகள் இலங்கையின் வரலாற்றில் பெரும் விளைவுகளை ஏற்படுத்திய போர்த்துக்கேய ஒல்லாந்த ஆங்கிலேய ஆக்கிரமிப்புகளிலிருந்து 1948ம் வருடம் பெப்ரவரி 4ம் திகதி எம் நாடு சுதந்திரம் பெற்றது.
இவ்வாறான ஒரு காலத்தில் (கி.பி1804) பிரித்தானியர் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டிருக்கம் வேளையில் ஓந்தாச்சிமடம் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் முன்னேற முயற்சித்துக் கொண்டிருந்தன. கண்டி மன்னனுக்கு விசுவாசமான பிரஜைகள் அவர்களின் முன்னேற்றத்தை முறியடித்து அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரித்தானிய அரசு குறித்த இடத்தில் படைகளை தடுத்த 169பேரையும் பிரித்தானிய அரசின் தேசதுரோகிகளாக 1804-06-04ம் திகதி பிரகடனப்படுத்தியது.
அவர்கள் பிரித்தானியருக்கு தேசதுரோகிகளாக இருக்கலாம் ஆனால் எம் நாட்டின் ஐக்கியத்தில் அவர்கள் தேசிய வீரர்களே. அவர்களுள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முக்கியமான ஏழு முஸ்லிம்களும் அடங்குகின்றனர் சம்மாந்துறையைச் சேர்ந்த அபூபக்கர் ஈஸா முகாந்திரமும் ஒருவர். இவர்களோடு வீரமுனையைச் சேர்ந்த கந்தப் போடி என்பவரும் காரைதீவில் வசித்த சம்மாந்துறையில் விதானையாக கடமையாற்றிய மயிலிப் போடி என்பவரும் இணைந்து போராடியுள்ளனர்.
இதனை நினைத்து ஒவ்வொரு சம்மாந்துறை மகனும் மகளும் பெருமிதம் கொள்ள வேண்டும்.
குறித்த நபர்கள் 1804-செப்படம்பர்-01ம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பிரித்தானியப் படைகளிடம் தங்களின் செயலிற்காக நீதி பெறும் பொருட்டு சரணடையாவிட்டால் அவர்களின் அசையும் மற்றும் அசையாத அனைத்துச் சொத்துக்களும் அரசின் பயன்பாட்டிற்குப் பயன்படுத்த பறிமுதல் செய்யப்படும் என்று பிரித்தானிய அரசின் பிரதான செயலாளர் Robert Arbuthnot அறிவித்திருந்தார்.
மேலும் போராட்ட வீரர்களின் தீவிரத் தன்மையும் தேசப்பற்றும் பிரத்தானியருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது தளபதி அபூபக்கர் ஈஸா முகாந்திரம் இறுதிவரை பிரித்தானியரிடம் அகப்படவில்லை. இதனால் அவருடைய முழுச் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. என்ற ஒரு செய்தியும், இவர் உமறுலெப்பை போடி உடையாரின் காலத்தில் வாழ்ந்தவரென்றும் அறியக்கிடைக்கின்றது.
பிரித்தானிய அரசின் பிரகடனம்
Proclamation 4th June 1804
Whereas certain Headmen and Inhabitants of Different Districts in this Island, (as described in the annexed List) have in a Traitorous and Hostile Manner adhered to His Majesty's Enemies, contrary to the Duty of their Allegiance, and are fled into the Kandian Country, to avoid their being apprehended and prosecuted according to the Law for their said Offence, we do hereby direct and declare, that if the said Headmen and Inhabitants shall not render themselves to one of His Majesty's Magistrates or Civil Officers within these Settlements, on or before the 1st of Day September next, and submit to Justice for the Offence aforesaid then any or every of them the said Headmen and Inhabitants not rendering themselves as aforesaid , and not submitting to Justice as aforesaid, shall from after the first day of September next, forfeit all his Property, both Movable and Immovable, within the british Territories in this islan, for the use of the crown, and the same shall from and after the said 1st Day of September next, be confiscated accordingly.
முகாந்திரம் எனப்படும் பதவிப்பெயரானது செல்வாக்குமிக்க கிராமத்தின் நபரொருவருக்கு வழங்கபட்ட பெயராகும். இவர் விதானைகளிற்கு மேலதிகாரியாக் தொழிற்படும் அதிகாரம் இருந்தது இலங்கையின் கிழக்கப் பகுதியில் பிரித்தானியரை எதிர்த்து, தனது உடமைகளையும் துச்சமெனக்கருதி தேசப்பற்றில் சிறந்து விளங்கிய இவ்வுன்னத வீரர்களை நினைவு கூர்வதில் சம்மாந்துறை என்றும் பெருமிதம் கொள்கின்றது.
தன் தாயிலும் பிறந்த தன்நாட்டிலும் நேசமில்லாதவன் நெஞ்சமில்லாதவனே
பலரும் மேட்கோள்காட்டியிருந்தபோதும் இவ்வாவணத்தின் முழுப்பிரதியும் University of Wisconsin நூலகத்தின் எண்ணிமப் பிரதியாக பலநாட் தேடலின் பின்னர் அண்மையில் கிடைக்கப்பெற்றது.
எல்லாப் பகழும் இறைவனுக்கே
ஆதாரம்
1) A collection of legislative acts of the ceylon government from 1796 : distinguishing those now in force பக் 75-79
2) அமீரலி பொதுநூலகத் திறப்புவிழா மலர்
3) சாஹிர். எம.சி.எம், “நம் முன்னோர் - ஸ்ரீ லங்காவின் கடந்தகால சோனகர், மலாயர், மற்றும் முஸ்லிம்கள்“, 1979 முஹம்மது ஸமீர் பின் ஹாஜி, இஸ்மாயில் எபன்டி