நன்றி - காரைதீவு குறுாப் நிறுபர் ( தினகரன்)
இவ் வருடத்திற்கான அம்பாறை மாவட்ட பூப்பந்தாட்டப் போட்டிகள் சம்மாந்துறை விளையாட்டு கட்டட தொகுதியில் அண்மையில் இடம்பெற்றது. மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேச செயலக பூப்பந்தாட்ட ஆடவர் மற்றும் மகளில் அணியினர் இதில் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி வே.ஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இவ் விளையாட்டுப் போட்டியில் விளையாட்டு உத்தியோகத்தர்களான பி.வசந்த, எல். சுலக்சன், வி. பாஸ்கரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
போட்டியின் இறுதியில் மகளிர்க்கான போட்டியில் காரைதீவு பிரதேச செயலக அணி முதலிடத்தையும் கல்முனை தமிழ் பிரதேச செயலக அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
ஆண்களுக்கான போட்டிகளில் கல்முனை-சம்மாந்துறை பிரதேச செயலக அணி முதலிடத்தையும் கல்முனை முஸ்லிம் பிரதேச அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.