தகவல் - ஜலீல் ஜீ.
நாளை 28-03-2018 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.ஹனீபா அவர்களின் தலைமையில் பிரதேச சாஹித்திய கலாசார பெரு விழா நடைபெறவிருக்கிறது. இது தொடர்பான முன்னேற்பாட்டுக் கூட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
இக் கலாச்சார பெரு விழாவின் ஓரங்கமாக எம் மண்ணின் மூத்த இலக்கியவாதியும், கலாச்சார அதிகார சபையின் துணைத் தலைவருமான கலாபூஷணம் மாறன் யூ செயின் அவர்களின் பிரஸ்தாப கவிதை நுாலும் வெளியீடு செய்து வைக்கப்படவிருக்கின்றது.
இவ் விழாவுக்கு அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.
இவ் விழாவுக்கு அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.