தகவல் - முஹமட் றிஸ்வான் (ஆசிரியர்)
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் தரம் 6,7,8,9,10,11 இரு மொழி பிரிவு மாணவர்களின் பெற்றோர் ஆகியோருக்கான கல்வி அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் பாடசாலை அதிபரின் தலைமையில் இன்று சனிக்கிழமை (17.03.2018) காலை 9.00AM ற்கு பாடசாலை அப்துல் மஜீட் மண்டபத்தில் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைள், ஒழுக்க விழுமியங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் பெருமளவிலான பெற்றோர்கள் கலந்து கொண்டு சுமுகமான கருத்துக்களையும் தெரிவித்தனர்.