1940-06-18ல் சம்மாந்துறையில் பிறந்த உதுமாலெப்பை ஸெயின் என்ற இயற்பெயர் கொண்ட செயின் சேர் அவர்கள் இலக்கிய உலகில் கலைவேள், மாறன், புரட்சிமாறன், சம்மாந்தறைவன் என பல புனைப்பெயர்களில் அழைக்கப்படுபவராவார், இவர் மேற் குறித்த புனைப் பெயரிலேயே எழுதியும் வந்துள்ளார்.
சம்மாந்துறை மக்கள் எல்லோராலும் ஸெயின் சேர் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் மட்-அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (சம்மாந்துறை), மட்-அரசினர் சிரேஸ்ட பாடசாலை. காரைதீவு விபுலானந்தா வித்தியாலயம், இரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை (அட்டாளைச் சேனை) ஆகியவற்றின் பழைய மாணவராவார்.1961-01-11ல் உதவி ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் 1998ல் ஓய்வு பெறும் போது அதிபர் சேவை தரம் 1ல் இருந்தார்.

இலக்கியத்தில் இவரது முதல் ஆக்கம் 1958ல் சுதந்திரன் பத்திரிகையில் வெளிவந்த கன்னத்தில் முத்தம் என்ற கிராமிய சித்திரமாகும் அன்றிலிருந்து இன்றுவரை நூற்றுக் கணக்கான கவிதை,பாடல்,சிறுகதை, உருவகக் கதை, நாடகம் வில்லுப்பாட்டு என்வற்றை எழுதியுள்ளார்.
கலாபாசம், நிலா, முல்லை, கலைக்குரல், கொள்கை போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராக செயற்பட்டு வந்துள்ளார். இனிக்கும் தமிழ் இலக்கணம் இரண்டு தொகுதிகளை வெளியிட்டுள்ள இவர் மேலும் சில நூல்களை வெளியிட ஆயத்தம் செய்து வருகிறார் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் இவரின் இலக்கிய சமூக சேவையை மெச்சி கலைவேள் பட்டமளித்து கௌரவித்தார்.
கீழே உள்ள இந்தப் புகைப்படம் மாறன் யூ ஸெயின் அவர்கள் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாஎவித்தியாலயத்தில் கற்பித்துக் கொண்டிருந்த போது. அவரால் இயற்றப் பெற்ற இதயம் தூங்குகிறது என்ற நாடகக் குழுவினரின் புகைப்படமாகும்.
இவர் சம்மாந்துறையின் இலக்கிய வரலாற்றில் இடம்பிடிக்கும் புரட்சிகர கையெழுத்து இதழ்களுள் ஒன்றான “கொள்கை“ சமூக சஞ்சிகையின் ஆசிரியருமாவார்...அச்சு இயந்திரங்களின் ஆதிக்கம் குறைந்த அன்றைய காலகட்டத்தில் வெறும் கைகளால் மாத்திரம் எழுதி கொள்கை என்ற சஞ்சிகையை வெளியிட்டு வந்தார்.
கலைக்குன்றத்தின் வெளியீடான இவ்விதழில் புரட்சிகரமான பல சமூகக்கருத்துக்கள் வெளியிட்பட்டிருக்கின்றன. சீதன ஒழிப்பு, சமய சீர்திருத்தம்.கல்வி விழிப்புணர்ச்சி என பல விடையங்களை இக் கையெழுத்து சஞ்சிகை கோடிட்டுக் காட்டியது.
இவர் எழுதிய கொள்கை சஞ்சிகையை வாசிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்..இது 1973ம் ஆண்டு கையால் எழுதப்பட்ட சஞ்சிகையாகும்.
தகவலுக்கு நன்றி - மொஹமட் ஷாகீர் (சம்மாந்துறை மண்வாசனை)
கொள்கை சஞ்சிகைக்கு நன்றி - SWDC சமூக சேவை அமைப்பு.