(எம்.எம்.ஜபீர்)
மனித நேய நற்பணி பேரவை சம்மாந்துறை ஸ்ரீலங்காவின் கல்விப் பிரிவு சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களுக்காக ஏற்பாடு செய்த கல்வி மேம்பாட்டு தர்பிய்யா மாநாடு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் போராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேருவளை ஜாமிய்யா நளீமிய்யா கலாபீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) பிரதம வளவாளராகவும் மனித நேய நற்பணி பேரவையின் தலைவரும், நிறைவேற்று பணிப்பாளருமான மனிதநேயன் இர்ஷாத் ஏ.காதர், சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் தலைவர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் உட்பட மனித நேய நற்பணி பேரவை பணிப்பாளர்கள், ஆலோசகர்கள், இணைப்பாளர்கள், கல்வியலாளர்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகளாக கலந்து கொண்டவர்களுக்கு மனித நேய நற்பணி பேரவையினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.