Ads Area

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு.

(எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் உயர்தரத்தில் கல்வி கற்று பல்கலைக் கழகத்திற்கு பிரவேசித்த மாணவர்கள் அவர்களை கற்பித்த அதிபர்களையும், ஆசியர்களையும் நேற்று  பாராட்டி கௌரவித்தனர்.



இதன்போது தமக்கு கற்பித்து பல்கலைக் கழக பிரவேசத்தை உறுதிப்படுத்தி ஓய்வு நிலையை அடைந்துள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் அதிபர், ஆசியர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



அமைப்பின் தலைவரும் ஸ்ரீலங்கா  காப்புறுதி நிறுவனத்தின் ஒய்வு பெற்ற பிராந்திய முகாமையாளருமான எம்.எல்.எச்.முபாறக் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல் ஆகியோர்கள் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட இதேவேளை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் ஏ.சீ.ஏ.இஸ்மாயில் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.



கற்பித்த ஆசியர்களான மல்வானையைச் சேர்ந்த ஏ.எல்.எம்.பத்தாஹ், பெரிய கல்லாற்றைச் சேர்ந்த மன்மதராசா, சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம்.இப்றாகீம், எம்.ஏ.தம்பிக்கண்டு, எஸ்.எல்.ஏ.சலாம், எம்.ஏ.எம்.ஷாபிடீன், முஹம்மட் அலி பாறுக், ஏ.சீ.ஏ.எம்.புஹாரி, யூ.எல்.அலியார், ஏ.ஆர்.முஹம்மட் அலி, ஆசிரியை மனோன்மணி சின்னத்தம்பி, அதிபர்களான எம்.எஸ்.மரைக்கார்த்தம்பி, ஏ.சீ.இஸ்மாலெவ்பை ஆகியோர்கள் பொன்னடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌவிக்கப்பட்டனர். இதேவேளை மரணித்த ஆசிரியர் மர்ஹூம் எஸ்.எச்.எம்.சாலிஹூவிற்கான பொன்னடை மற்றும் நினைவுச் சின்னம் அவரது உறவினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe