சம்மாந்துறையில் தங்க நகைகள் மற்றும் பணம் போன்றன கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்கம்பிட்டி சுவீஸ் கோல்ட் ஹவுஸ் நகைக் கடையிலிருந்து சுமார் 27 இலட்சம் ரூபா பெறுமதியான 52 பவுண் தங்க நகைகளும் 75 ஆயிரம் ரொக்கப் பணமும் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான இப்னு அஸார் தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
இந்நிலையில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் களவாடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மொனராகலை, தம்பகல்ல என்ற இடத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி - மக்கள் விருப்பம்.