(எம்.எம். ஜபீர் )
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் மாணவர்களுக்கிடையே மனித உரிமைகள், அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றின் தெளிவையும் அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம் பற்றிய அறிவை வளர்க்கும் நோக்கில் மட்டக்களப்பு டேவர் மண்டபத்தில் கடந்த புதன்கிழமை நடாத்தப்பட்ட அறிவுப் புதிர்ப் போட்டியில் மாகாண மட்டத்தில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களான ஏ.கே.எம்.மிப்றாஸ், எப்.எஸ்.எம்.சியாத் அன்சத், எம்.ஏ.எம்.அஹ்ரப் அறபாத், வீ.எம்.சஜாம் முகம்மட் ஆகியோர்கள் இம்முறை மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் ஏ.சீ.ஏ.எம், இஸ்மாயில் தெரிவித்தார்.
இதில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்வி பணிப்பாளர் ஏ.றியால், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் ஏ.சீ.ஏ.எம். இஸ்மாயில் பொறுப்பாசிரியர் எம்.ஐ.அச்சு முஹம்மட், மாணவர்கள் ஆகியோர்களை படத்தில் காணலாம்.