Ads Area

சம்மாந்துறை தவிசாளர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் !!!

By: மாஹிர் மொஹிடீன்

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ A.M.M.நௌசாட் சேர் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் !

நமது ஊரை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லவேண்டுமானால் உடனே செய்யப்பட வேண்டிய 3 விடயங்கள் :

1. ஊரின் சில வீதிகளுக்கு மறுபெயரிடல்

நாகரீகத்தின்  உச்சியில் இருக்கும் நாம் இன்னும் நமது ஊரின் பல வீதிகளுக்கு பெயர் வடிவத்தில் பெயர் வைக்க மறந்து விட்டோம். உதாரணமாக

கல் 1ம் வீதி,
கல் 2ம் வீதி,
மல் 1ம் வீதி,
மல்  2ம் வீதி,
அம் 1ம் வீதி,
அம் 2ம் வீதி,
அம் 3ம் வீதி ...

இப்படிப் பெயரிடப்பட்டுள்ள வீதிகளுக்கு இஸ்லாமிய அடிப்படையிலான சஹாபாக்களின் பெயர்கள் ....உதாரணமாக அபூபக்கர் வீதி, உமர் வீதி, உதுமான் வீதி, அலி வீதி, அன்னை கதீஜா வீதி, அன்னை மரியம் வீதி, அன்னை ஆயிஷா வீதி, அன்னை ஸபிய்யா வீதி என்று நமது இஸ்லாமிய வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட பெயர்கள்

அல்லது நமது சம்மாந்துறையின் சரித்திர நாயகர்களின் பெயர்கள் உதாரணமாக ஈஸா முகாந்திரம் வீதி, அப்துல் மஜீத் வீதி, அஸ்ரப் வீதி, அமீர் அலி வீதி, அன்வர் இஸ்மாயில் வீதி, ஈழமேகம் பக்கீர்தம்பி வீதி, பாவலர் பஸீல் காரியப்பர் வீதி, டாக்டர் மீராலெப்பை வீதி,சமத்துவவாதி ஆனந்தன் வீதி இப்படி சம்மாந்துறையின் சரித்திர நாயகர்களின் பெயர்களை வைக்கலாம்.

2; சம்மாந்துறையின் சரித்திரம் அழிவதற்கு  முன் ஒரு சரித்திர நூதனசாலை
   
சம்மாந்துறையின் சரித்திரத்தை நமது இளைய தலைமுறைக்கு விட்டு செல்ல ஒரு சரித்திர நூதனசாலை காலத்தின் தேவை என்பது யாவரும் அறிந்ததே ... ஆனால் அதை யார் நிஜமாக்குவது என்பதுதான் இங்கே கேள்விக்குறி ??? சம்மாந்துறையின் பாரம் பரிய பழைய பொருட்கள், வரலாற்று நூல்கள், வரலாற்று ஆவணங்கள், அரிய புகைப்படங்கள், நமது விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட ஆனால் தற்போது பாவனையில் இல்லாத பொருட்களை ஒன்று படுத்திப் பார்வைக்கு வைக்க வேண்டிய நேரம் இது. இதை எமது பழைய பட்டின சபைக் கட்டிடங்களில் ஒன்றில் ஆரம்பிக்கலாம் என்பது ஊரில் பலரின் அபிப்பிராயம் அதனால் அதையும் உடனே செய்ய வேண்டிய கடமை நமது பிரதேச சபைக்கு உள்ளது.

3. நமதூரின் பிரதான வீதிகளில் மரம் நடுவது

சம்மாந்துறையின் பிரதான வீதிகளின் இரு புறங்களிலும் மரம் நட வேண்டியதும் அதை முறையாகப் பராமரித்தலும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் கடமை மட்டுமல்ல அது காலத்தின் தேவையும் கூட என்பதும் யாவரும் அறிந்ததே !!

அண்மையில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ நவுசாத் அவர்கள் மக்கள் பாவனைக்கு இடையூறாகக் காணப்பட்ட வீதிகளைப் புனரமைப்புச் செய்யுமாறு சகல வட்டாரப் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் தீவிர உத்தரவு வழங்கப்பட்டதற்கும் நமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe