Ads Area

மலேசியாவின் மஹதிர் முஹம்மத் சம்மாந்துறையில் பிறந்திருந்தால் ....

ஒரு காலத்தில் பின்தங்கிய நாடாக இருந்த மலேசியாவை உலகம் விகைக்கும் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றிய 'மலேசியாவின் தந்தை' என்று அன்பாக அழைக்கப்படும் மலேசியப் பிரதமர் மஹ்திர் முஹம்மத் சம்மாந்துறையில் பிறந்திருந்தால் என்ன செய்திருப்பார் ???

ஒரு காலத்தில் உலகிலேயே உயரமான கட்டிடமான கோலாலம்பூர் 'பெட்ரோனா டவர்ஸ்' மாதிரி சம்மாந்துறையில் ஒரு பெரிய தொடர் மாடி (Apartment Complex) வீடுகளைக்கட்டி எல்லா ஏழைப் பெண்களுக்கும் சீ -தனம் இல்லாமல் கல்யாணம் செய்து வைத்திருப்பார்.

மலேசியாவின் வறுமையை ஒழிக்க எப்படி தொழில்சாலைகளை உருவாக்கினாரோ அதேபோல் சம்மாந்துறையிலும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு முற்றுப்புள்ளிவைக்க தொழில்சாலைகளை  (Industrial Complex) நிறுவியிருப்பார்,

கோலாலம்பூர் மாதிரி உலக தரத்தில் சம்மாந்துறையையும் நவீன மயப்படுத்தப்பட்ட மாநகர சபையாக (Municipal Council) மாற்றியிருப்பார்.

மலேசியாவின் சரித்திரம் சொல்லும் மலேசிய 'தேசிய அருங்காட்சியகம்' போன்று சம்மாந்துறையிலும் அதன் சரித்திரம் சொல்லும் ஒரு அருங்காட்சியகம் (Historical Museum) ஒன்றை அமைத்திருப்பார்.

சர்வதேச தரத்தில் அதிநவீன விமான நிலையமான கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம்போல் சம்மாந்துறை அல்லையில் தண்ணீரில்தரை இறங்கும் (Float Plane Terminal) ஒரு விமான இறங்குதுறையை அமைத்திருப்பார்.

மலேசியாவில் உள்ள திறந்தவெளி சந்தைகள் (Flea Market) போல் வசதி குறைந்த ஏழைகளுக்கு குறைந்த விலையில் பயன்படுத்தப்பட்ட பொருட்களைவிற்கும்  ஒரு சந்தையை ஏற்படுத்தியிருப்பார்.

மொத்தத்தில் சம்மாந்துறையை உலகம் வியக்கும் "சம்மான்பூராக" மாற்றியிருப்பார். இந்தக் கட்டுரை பிடித்திருந்தால் இது  சம்மாந்துறையின் அனைத்து அரசியல்வாதிகளையும் சென்றடையும் வரையும் பகிரவும் அத்தோடு சம்மாந்துறையை மேம்படுத்த மேலும் என்ன செய்திருப்பார் என்பதை கொமண்ட் பண்ணவும். நன்றிகள்.

By: மாஹிர் மொஹிடீன் 
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe